Homeவிநாயகர் காரிய சித்தி மாலை
விநாயகர் காரிய சித்தி மாலை
விநாயகர் காரிய சித்தி மாலை

விநாயகர் காரிய சித்தி மாலை

 
₹0
Product Description

விநாயகர் காரிய சித்தி மாலை, ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை காஷ்யப முனிவர் வடமொழியில் இயற்றினார். அதை கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்தார்.

எந்தப் பணியை ஆரம்பித்தாலும் விநாயகரை வணங்கி ஆரம்பிப்பது நம் மக்களின் வழக்கம். எழுதுவதற்கு முன் குட்டியாக ஒரு பிள்ளையார் சுழி போட்டுவிட்டு எழுதத் தொடங்குவதும் பலருக்கு வழக்கம். விக்னமில்லாமல் முடிய வேண்டிய எந்த வேலைக்கும் விக்னேஸ்வரரின் அருள் கட்டாயம் வேண்டும்.

அன்றைய கடமைகள் என்றில்லாமல், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் எதிர்ப்படும் பிரச்னைகளை எளிதாகக் கையாளவும், முறையாகத் திட்டமிடவும், அனைவரிடமும் அன்பு செலுத்தவும், அனைவரது அன்பும் நம் மீது பரவவும், சுமூகமான வாழ்வை சந்தோஷமாக மேற்கொள்ளவும் இந்த விநாயகர் காரிய சித்தி மாலையை தினமும் ஜபிப்பது அவசியம் என்று வலியுறுத்துகிறார் காஷ்யப முனிவர்.

இதில் 8 பாடல்கள் உள்ளன. இப் பாடல்கள் முற்றிலும் தமிழிலேயே அமைந்துள்ளன. இது எளிமையானது. நேரடியானது. நாமே எளிதில் பொருள் புரிந்து கொள்ளலாம்.

இக்காரியசித்திமாலை பாடல்களை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும்.

இதனை தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன் விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது உறுதி.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும். தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும். தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.

Total Pages : 6 File Format : PDF

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Create your own online store for free.
Sign Up Now