கண்ணம்மா (சிறுகதைகள்) - ஜீவ கரிகாலன்

Share
  • Ships within 2 days
150
Description

தற்போதைய சிறுகதை எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தகுந்தவர் ஜீவ கரிகாலன். அவருடைய தொகுப்பு கண்ணம்மா வாசிக்கும் போதே வேறோர் உலகுக்கு எடுத்துச் செல்கிறது. எழுதுபவன் நடப்பிலும் வெளியிலும், யதார்த்தத்திலும் கற்பனையிலும், இருப்பிலும் இன்மையிலும் பயணப்படுவதைப்போலே நம் மனமும் ஊசலாடுகிறது.கதை சொல்லியின் துரட்டியால் அதை கொய்து பின் நம்முள் பொருத்திக் கொள்கிறோம். சொல்லத் தெரியாத ஓர் உணர்வால் பீடிக்கப்பட்டு அலைகிறது நம் உளம். அவர் கதை மாந்தர்கள் நீரில் குதிக்கிறார்கள் , தம் முகம் காட்டாது சென்றுகொண்டே இருக்கின்றனர். அப்பொழுதெல்லாம் மலையுச்சியில் சந்தித்த நால்வரில் யாரோ ஒருவராகிறோம். இக்கதைகள் ஏற்படுத்திய மன அசைவினால் பாதிக்கப்பட்டு விண்நோக்கி அமர்கையில் ஒரு நட்சத்திரம் நம்மையும் நோக்கி கண்சிமிட்டி இடம் பெயர்கிறது. கண்ணம்மா காலத்தை மீறி நிற்பாள்.

  • பத்மஜா நாராயணன்