றெக்கை - சிறார் இதழ்

Share
  • Ships within 2 days
40
Description

தமிழில் வறட்சி நிலவும் சிறார் இலக்கியச் சூழலில் துளிப் பங்களிப்பு செலுத்துவதும், விரல் விட்டு எண்ணத்தக்க சிறார் இதழ்களின் பட்டியலுக்கு வலுசேர்ப்பதுமே 'றெக்கை'யின் முக்கிய நோக்கம்.
சிந்தனைகளை மழுங்கடிக்கக் கூடிய சூழல்கள் மிகுந்த சமகாலத்தில், நம் சின்னஞ்சிறு மனிதர்களிடம் வாசிப்பை விரும்பவைப்பது கடமை. இதற்குத் துணைபுரியும் முயற்சிகளில் பங்கெடுக்கிறது 'றெக்கை'.

இன்றைய சிறார் உலகம் தகவல்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அறியாமலேயே அவர்களது மூளைக்குள் தகவல்கள் புகுந்துவிடுகிறது. அங்கிங்கெனதாபடி எங்கெங்கும் கொட்டிக்கிடக்கும் தகவல்கள் சில நேரங்களில் அவர்களைச் சோர்வடையவும் செய்கிறது. இதைக் கருத்தில்கொண்டே 'றெக்கை' உள்ளடக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக நம்புகிறோம்.

சிறார் இதழ் என்றாலே தகவல் களஞ்சியம்தான் என்ற எழுதப்படாத விதியைத் தவிர்த்து, கொண்டாட்டங்களுக்கும் படைப்பாற்றலுக்கும் கூடுதல் முக்கியத்துவம் தரவேண்டும் என்பதை 'றெக்கை' ஆசிரியர் - ஆலோசனைக் குழு உறுதியாக உள்ளது. அதாவது, என்டர்டெயின்மென்ட்டுக்கும் கிரியேட்டிவிட்டிக்கும் முக்கியத்துவம் கொடுத்தே 'றெக்கை' வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசிப்பை ஜாலியாகத் தொடங்கும் சிறுவர்கள் பின்னாளில் தங்களை அறியாமலேயே தீவிர சிறார் இலக்கியத்தை நாடத் தொடங்குவர் என்பது எங்களது நம்பிக்கை.

  • ஆசிரியர் சரா சுப்ரமணியம்