ஓகி’ மரணங்கள் “இனப்படுகொலை என்கிறேன் நான்” - டி. அருள் எழிலன்

Share
  • Ships within 2 days
50
Description

சுனாமிக்குப் பிறகு, தமிழகக் கடற்கரையோர மக்கள் சந்தித்த மிகப் பெரிய துயரம்… ஓகி! கரையில் ஒரு பக்கம் உணவின்றித் தத்தளிக்க, இன்னொருபுறம் கடலில் மீன் பிடிக்கச் சென்ற பல நூறு மீனவர்களைக் காணவில்லை என்கிற செய்தி, தமிழகத்தையே உலுக்கியது. ஆனால் அவர்களை மீட்பதற்காக மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டன.

காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினர் கேட்கும் பல கேள்விகளுக்கு அரசுகளிடம் பதில் இல்லை. மீனவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கான கருவிகளோ, வசதியோ மத்திய அரசிடம் இல்லை என்பது எவ்வளவு பெரிய அவலம்? இந்த அம்சங்களை முன்வைத்து பத்திரிகையாளர் டி.அருள் எழிலன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம், அரசுகளின் இயலாமையை வெட்ட வெளிச்சமாக்குகிறது!
- தமிழ் இந்து நாளிதழ்